Tuesday, March 11, 2014

குழந்தைகள் ஒரு தனித்துவமான செல்வமாகும்.

குழந்தைகள் ஒரு தனித்துவமான செல்வமாகும். அவர்களின் எதிர்கால வெற்றிகள் அவர்களுடைய பிறப்பில் இருந்து முதல் 7 வருடங்களில் அவர்களுக்கு கொடுக்கப்படும் கல்வியிலும் ஒழுக்கத்திலும் அடங்கியிருப்பதை நீங்கள் அறிவீர்களா?

சர்வதேச ரீதியில் பிரபல்யம் பெற்ற AMI மொன்டஸூரி பாடத்திட்டம் குழந்தைகளின் இந்த சவாலுக்கு சிறந்த வழி வகைகளை உள்ளடக்கிய பாட நெறியாகும்.

தாருல் ஹிக்மா சர்வதேச பாடசாலையில் 2011 ஜனவரி முதல் இந்த பாடத்திட்டம் செயல் படுத்தப்பட்டமையினால் எமது மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கத்தில் பல முன்னேற்றங்களை நாம் கண்டு வருகிறோம்.

அத்துடன்  இந்த பாட நெறி ஆசிரியர்களுக்கு பயிற்சிக்கும் ஒரு பயிற்சி நிறுவனமாகவும் இயங்குதை உங்கள் கவணத்திற்கு தருகிறோம்.

ஆகவே உங்கள் பிள்ளைகளின் கல்வியை ஆரம்பத்தில் இருந்தே குழந்தை உளவியல் மற்றும் கலாச்சார அறிவுகளை அறிந்த ஆசிரியர்களுடைய சிறந்த வழிகாட்டலுடன் தொடருங்கள். இது உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் செய்யும் பெரிய முதலீடாகும்.

எமது  பாலர் பாடசாலையில் 21/2 வயது முதல் பிள்ளைகளை அனுமதிக்கலாம். வருடத்தில் எந்த மாதத்தில் குழந்தைகள் இந்த வயது எல்லையை அடைவார்களோ  உடனேயே அனுமதிகளை பெற்றுக் கொள்ளுங்கள். (ஜனவரி மாதம் வரை காத்திருக்கத் தேவையில்லை.)   

குறிப்பு: குழந்தைகளை அவர்களின் கல்வியின் மேன்பாட்டுக்கு  இந்த வயது எல்லையில் இருந்தே சில கவணிப்புகள் செய்யப்படவிருப்பதினால் இந்த கால எல்லையில் எமது பாலர் பாடசாலையில் அனுமதிக்க தவர விட வேண்டாம்.

இந்த பாலர் பாடசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகள் முதலாம் வகுப்பிற்கு வரும் பொழுது எந்த வித மேலதிக கட்டணமும் இன்றி அனுமதிக்கப்படுவார்கள். நீங்கள் வேறு பாடசாலைககள் தேட வேண்டிய அவசியமில்லை.

 

 

No comments:

Post a Comment